”ரஜ லுனு” என்ற பெயர் ‘ஆனையிறவு உப்பு’ என மறுபெயரிடப்படும்- அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி!

யாழ்ப்பாணம் – ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, ‘ஆனையிறவு உப்பு’ என மறுபெயரிடப்பட்டு, உள்ளூர் சந்தையில் வழங்கப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (03) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இந்தப் பதிலை வழங்கியுள்ளார்.

ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்பு ”ரஜ லுனு” என்று பெயரிடப்பட்ட நிலையில், இந்த நாட்டில் தமிழ் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டதாக அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

சில பிரச்சினைகள் காரணமாக நாட்டின் தமிழ் மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்க தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply