நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் நாளை வேலைநிறுத்தம்!

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் நாளை (05) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இணை சுகாதாரப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடலை அமைச்சர் தவிர்த்து வருவதாகவும், நிறைவுகாண் வைத்திய சேவையின் பதவி உயர்வுகள் தொடர்பாக வாக்குறுதியளிக்கப்பட்ட தீர்வுகளை வழங்க இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கலந்துரையாடல் இன்றி வேலைநிறுத்தத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்று நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply