வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் இரத்தக்கறைகளுடன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் பொலிஸாரால் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை கபிநாத் என்ற 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணையை ஆரம்பித்தனர்.
உயிரிழந்த இளைஞர் நேற்று (03) மாலை இளைஞர் குழுவொன்றுடன் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலத்தில் இரத்தக்கறை படிந்துள்ள நிலையில் குறித்த மரணம் கொலையா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா குற்றப்பிரிவு பொலிசார், சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
