கொழும்பு – வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள 5 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராசையா தவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் 3 வருடங்களுக்கு முன்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணா பிளேஸில் உள்ள ஒரு வர்த்தகரின் வீட்டிற்கு காவலாளியாக வேலைக்கு வந்துள்ளார்.
இன்று (04) காலை மேல் மாடியில் உள்ள நடைபாதைக்கு அருகில் மர கைப்பிடியால் செய்யப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி யன்னல் அடைப்புகளை சுத்தம் செய்யும் போது அவர் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
