நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் இன்று வேலைநிறுத்தம்!

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் இன்று (05) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இணை சுகாதாரப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வுகளை வழங்காத காரணத்தினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்ததாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடலை அமைச்சர் தவிர்த்து வருவதாகவும், நிறைவுகாண் வைத்திய சேவையின் பதவி உயர்வுகள் தொடர்பாக வாக்குறுதியளிக்கப்பட்ட தீர்வுகளை வழங்க இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

எனினும் புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை மற்றும் மத்திய இரத்த வங்கி உள்ளிட்டவை இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply