ரயிலில் மோதி தம்பதியினர் உயிரிழப்பு!

தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியினர் கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது.

பதுளை, பதுலுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய இருவரே சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரின் சடலங்களும் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply