சமுர்த்தி வங்கிகளின் கணக்காய்வுக்கான புதிய சட்டமூலம்!

சமுர்த்தி சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இதற்கான சட்ட மூலத்தை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி சட்டமூலத்திற்கு அமைவாக, தேசிய கணக்காய்வு சட்ட விதிகளின் கீழ் சமுர்த்தி சமூக வங்கிகளின் கணக்குகள் மற்றும் சமுர்த்தி சமூக வங்கி சங்கங்களின் கணக்குகளை கணக்காய்வு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிறகு சமுர்த்தி திருத்தச் சட்டம் என்று பெயரிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply