பத்தாவது நாடாளுமன்றத்தில், கலை-கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று கையளிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ன மற்றும் ருவன் மாபலகம ஆகியோர் இந்த முன்மொழிவை கையளித்தனர்.
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அடுத்த கூட்டத்தில் குறித்த முன்மொழிவு தொடர்பில் கருத்திற்கொண்டு எதிர்கால நடவடிக்கை எடுப்பதற்காக ஆற்றுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
