தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பசுமை காடாக்கல் செயற்றிட்டம்!

தேசிய சுற்றாடல் வாரம் மற்றும் தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பசுமை காடாக்கல் செயற்றிட்டம் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் குறித்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு 450 மரக்கன்றுகளை கிறீன் லேயர் நிறுவனத்தினர் இலவசமாக வழங்கியுள்ளனர்.

நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் முதலானோர் கலந்துகொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply