பல்கலைக்கழக அனுமதிக்காக 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்காக 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக அனுப்பப்பட்டுளள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

எனினும் ஏற்கனவே பதிவு செய்த மாணவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி வரை தமது விருப்ப வரிசையை மாற்றிக்கொள்ள முடியும் எனவும், இதனை இணையவழி மூலம் மேற்கொள்ள முடியும் எனவும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply