பண மோசடி செய்த குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா பெற்றுக்கொடுப்பதாக கூறி 15 இலட்சம் ரூபா மோசடி செய்தமை மற்றும் அமெரிக்க டொலர் வழங்குவதாகக் கூறி 191,600 ரூபா பண மோசடி செய்ததாக குறித்த பெண் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விசாரணையை முன்னெடுத்து வந்த கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சீனப் பெண்ணை கைது செய்துள்ளனர்.
54 வயதுடைய சீனப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
