யாழ். செம்மணி ஆய்வில் தோண்டத் தோண்ட வெளிப்படும் எலும்புக்கூடுகள்!

யாழ். செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரையில் அங்கு 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. ஆனந்தராசாவின் கண்காணிப்பின் கீழ் நேற்று (05) நான்காம் நாளாக நடைபெற்றது.

நேற்றைய அகழ்வின் போது ஐந்து மண்டையோட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டன.

இந்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (06) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் திறந்த வெளி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply