வேன்- மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து- 23 வயது இளைஞன் பலி!

குளியாபிட்டி-மாதம்பே பகுதியில் வேன்- ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குளியாபிட்டியிலிருந்து மாதம்பே நோக்கி பயணித்த வேன், அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளை முந்த முயன்றபோது எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இருவரும் குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பத்துலு ஓய பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பின்னால் அமர்ந்திருந்த பெண் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக வேன் சாரதி மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply