மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த அதிகாரி, கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
