கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள கட்டடம் ஒன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளன.
இன்று (06) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது ஒரு முச்சக்கரவண்டி மீது தீ பற்றியதை அடுத்து, அருகில் நின்ற கார் மற்றும் 6 முச்சக்கரவண்டிளுக்கும் தீ பரவி இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்த தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
