புற்றுநோயுடன் வாழும் மக்களின் வாழ்நாளை நீடிப்பதற்காக புதிய மருந்து கண்டுபிடிப்பு!

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுடன் வாழும் மக்களின் வாழ்நாளை நீடிப்பதற்காக அண்மையில் கேபிவசெர்டிப் (capivasertib) என்ற மருந்து ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

கேபிவசெர்டிப் (capivasertib) என்ற மருந்தை கார்டிஃப் பல்கலைக்கழகம் மற்றும் வெலின்ந்ரே புற்றுநோய் மையம் இணைந்து உருவாக்கியுள்ளன.

குறித்த மருந்து ஏப்ரல் மாதம் தேசிய சுகாதார சேவையில் (NHS) முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மருந்தை தற்போது வேல்ஸில் உள்ள என்.எச்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சில நோயாளிக்கு முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஹார்மோன் ஈஸ்ட்ரோஜனை எடுத்துக் கொள்ளும் பெண்கள் இந்த கேபிவசெர்டிப் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது அவர்களின் ‘வாழ்நாள்’ இரட்டிப்பாகும் என்று ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிகாட்டியுள்ளன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply