அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட UL 306 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்தோனேசியாவின் மேடானில் உள்ள கோலா நாமு சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்தோனேசிய தொழில்நுட்பக் குழு விமானத்தை ஆய்வு செய்து, பழுதுபார்ப்பதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிடம் தெரிவித்துள்ளது.

ஜூன் 6 ஆம் திகதி அதிகாலையில் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட இலங்கை தொழில்நுட்பக் குழு, விமானத்தை மதிப்பீடு செய்து பழுதுபார்க்க மேடானுக்கு வந்தது.

சிக்கித் தவிக்கும் பயணிகளை அவர்களின் இலக்குக்கு அழைத்துச் செல்ல, ஜூன் 6 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:45 மணிக்கு புறப்படுவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனி விமானத்தைத் திட்டமிட்டது.

எவ்வாறெனினும், சிக்கித் தவிக்கும் பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட காத்திருப்பு காலம், போதுமான வசதிகள் மற்றும் தெளிவான தகவல் தொடர்பு இல்லாமை குறித்து முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply