துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்த போராட்டமானது இன்று காலை 8 மணிக்கு நிறைவுக்கு வந்துள்ளது.
ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்த போராட்டத்தில், 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமது இந்த போராட்டத்தினால் நோயாளர்களுக்கு பெருதும் பாதிப்படைவதால், அவர்களைக் கருத்திற்கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்ததாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
எனினும், மருத்துவ ஆய்வக வல்லுநர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பதவி உயர்வுகள், வார இறுதி மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள், பட்டதாரி ஆட்சேர்ப்பு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஒப்பந்தங்களை புறக்கணித்தல், ஓய்வூதிய நிபந்தனைகள் மற்றும் பயிற்சிகள் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் போராட்டத்தை ஆரம்பித்தது.
இது நோயாளர்களுக்கு கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தியது.
இத்தகைய பின்னணி இருந்த போதிலும், சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வரமாட்டார் என தெரிவித்தே, வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
எனினும் ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்த போராட்டத்தில், 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
