வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் ஹோமாகம, கலவிலவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

46 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் இருந்து 1040 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply