யாழ். சட்டத்தரணி ஒருவர் தொடர்பில் அவதூறு பரப்பிய நபர் கைது!

யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல் பரப்பிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டார்.

இணுவில் பகுதியை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், போலி உறுதிகளை நிறைவேற்றியதாக தெரிவித்து சட்டத்தரணியின் புகைப்படத்துடன் போலியான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அவதூறு பரப்பியமை தொடர்பில் சட்டத்தரணி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த சமூக வலைத்தள கணக்கு உரிமையாளரை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், சமூக வலைத்தளத்தில் சட்டத்தரணி தொடர்பாக பதிவிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கோரி இருந்தனர்.

குறித்த நபர் ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியமையால், அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply