குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடுமுன்னேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மண்வெட்டியைக் கொண்டு கணவன் தாக்கியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய உயிரிழந்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
