சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது!

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

எலபடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று (08) இரவு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 7,600 சிகரெட்டுக்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply