மோட்டார் சைக்கிள் – பேருந்து விபத்து; ஒருவர் பலி!

மாத்தறை மித்தெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹக்மன பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை மித்தெனிய வீதியின் ஹொரொன்தூவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

யடியன பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திஹகொட பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply