தேசிய பொசன் வாரம் ஜூன் 7ஆம் திகதி முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 7,021 பொசன் தானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொசன் தானங்களில் கலந்துகொள்ளல் மற்றும் பொசன் தானங்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொசன் தானம் வழங்க விரும்புபவர்கள் முதலில் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவிலான பொசன் தானங்கள் அநுராதபுரம்,பொலன்னறுவை, குருணாகல் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் பொசன் தானங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
