முள்ளியவளை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி பல்வேறு வகையான நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை, பாற்செம்பு, பரவ காவடி, தீச்சட்டி என பல்வேறு வகையான நேர்த்தி கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
பொங்கல் உற்சவத்தில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பொலிசார், இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் ஆகியோர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத் தினைக்களத்தினர் சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



