முன்னாள் எம்.பி உதய கம்மன்பில CIDயில் இருந்து வௌியேறினார்! 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பிற்பாடு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் பட்டியலைப் பகிரங்கப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தன்னிடம் உண்மையான சாட்சியங்கள் இருப்பதாகவும், ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை ஒருபோதும் கூற மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் சம்பவம் தொடர்பான முடிவுகளை எடுத்த அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக வெளிநாட்டு பயணத் தடையை விதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply