இலங்கையின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சம்!

இலங்கை- தலைமன்னாரிலிருந்து, தனுஷ்கோடிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக சென்றுள்ள நிலையில் அவர்கள் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டவர்கள் நேற்றைய தினம் அதிகாலை தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி பாத்திமா பர்ஹானா (34) இவர்களின் குழந்தைகள் முகம்மது யஹ்யா (12), அலிஷா (4), அமிரா (4) ஆகிய 5 பேரே இவ்வாறு அகதிகளாக சென்றுள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த பொலிஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதிக்கு விரைந்து அங்கிருந்த இருந்த 5 பேரையும் மண்டபம் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது பலரிடம் கடன் பெற்று திருப்பி கொடுக்க முடியாத காரணத்தால், வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக முகம்மது கியாஸ் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு பின்னர் அவர்கள் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply