குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ள ரணில் விக்ரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாடுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

குறித்த முறைப்பாடுடன் தொடர்புடைய விசாரணைகளின் கீழ், கடந்த அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமைச்சரவையின் கூட்டு பொறுப்பிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply