கதிர்காம முருகன் ஆடிவேல் விழா- யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்படும்!

கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா 26ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 11 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

இந்தநிலையில், வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, மீண்டும் குறித்த காட்டுப்பாதை ஜூலை மாதம் 04 ஆம் திகதி மூடப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம தெரிவித்தார்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன் ஆலயத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்து கதிர்காமத்தை சென்றடைவது வழக்கமாகும்.

வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி காலை உகந்தமலை முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள ஆரம்ப வைபவத்தை அடுத்து காட்டுப்பாதை காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாத்திரமே திறந்து இருக்குமெனவும் அக் காலப்பகுதிக்குள் மட்டுமே காட்டுக்குள் செல்ல யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply