தையிட்டி திஸ்ஸ விகாரையில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!

தையிட்டி திஸ்ஸ விகாரையில் வழிபாடுகளை மேற்கொள்ள வருகை தந்திருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கஞ்சாவுடன் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

திஸ்ஸ விகாரையில் வழிபாடு மேற்கொள்ள வருகை தந்த குறித்த நபர் அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

அதன்பின்பு அவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது அவரிடம் இருந்து கஞ்சா மீட்கப்பட்டது.

இதனையடுத்து அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply