சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த ஒரு கைதியை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கடந்த ஞாயிறு (08) இரவு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர், நேற்று (09) இரவு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்த குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நேற்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply