பண்டாரவளை மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசம்!

பண்டாரவளை மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்செலாகே சாகர தீர விஸ்வவிக்ரம தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேயர் பதவிக்காக இன்று (11) நடைபெற்ற தேர்தலில் 04 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 06 உறுப்பினர்களை கொண்டுள்ள அதேநேரத்தில்,

சுயேச்சை குழு எண்1, 05 உறுப்புனர்களை கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 03 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன 02 உறுப்புனர்களை கொண்டுள்ளது.

சுயேச்சை குழுக்கள் தலா ஒரு உறுப்பினர்களை கொண்டுள்ளன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply