பொகவந்தலாவையில் கன மழையால் கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரிப்பு!

பொகவந்தலாவ பகுதியில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

பொகவந்தலாவ பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கிளை ஆறான கெசல்கமுவ ஓயாவில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் இதனை அண்டிய பொகவந்தலாவ நகரத்திலிருந்து தெரேசியா மற்றும் கிலானி தோட்டங்களுக்குச் செல்லும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன,

இதனால் அந்த வீதிகளில் பயணிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply