அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மேஹான் கருணாரத்ன எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மேஹான் கருணாரத்ன கடந்த 8ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்று (11) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
