ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி கைதியொருவரை விடுதலை செய்த பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனியவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்த குற்றசாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று முன்தினம் (09) துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கு இன்றையதினம் (11) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறைப்பாடு தொடர்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதிவாதி சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்டு, பிணை மனுவை நிராகரித்து கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
