சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் நீதி அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
