அகமதாபாத்தில் விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்துக்குள்ளான விமானம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்டு, பிற்பகல் 1:10 மணிக்கு திட்டமிடப்பட்டு, 1:38 மணிக்கு புறப்பட்டு, இரண்டு நிமிடங்களில், அதாவது 1:40 மணிக்கு மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
