வவுனியா சிறைச்சாலைக்கு திடீரென வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர்!

வவுனியா சிறைச்சாலைக்கு இன்றையதினம் (12) திடீரென வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா சிறைச்சாலைக்குள் நுழைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வவுனியா சிறைச்சாலையை சோதனை செய்துள்ளதுடன், அங்கு தங்கியிருந்து கடமையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலையில் பணியாற்றும் பத்திற்கு மேற்பட்டவர்களை விசாரணைக்காக அனுராதபுரம் அழைத்துச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply