இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இராணுவத் தளபதியாக பணி புரிந்த ஜெனரல் ஹமில்டன் வனசிங்க தனது 91வது வயதில் இன்று காலை காலமானார்.
1988 மற்றும் 1991 க்கு இடையில் இராணுவத் தளபதியாக பணியாற்றி வந்த ஹமில்டன் , 1995 இல் ஓய்வு பெற்ற பின்பு கூட்டு நடவடிக்கைத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது இறுதிச் சடங்கு குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
