நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணியின் காரணமாக இன்று (13) நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள் 25 நாட்களுக்கு நடைபெறும் என்று மின்சார சபை அறிவித்துள்ளதுடன், இதனால் தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 2 மின் பிறப்பாக்கிகள் செயல்பாட்டில் உள்ளதால் மின்சக்தி விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.
