இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

இஸ்ரேல் – ஈரானுக்கிடையில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், இலங்கை மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் செல்ல இருப்பவர்கள் தமது பயணங்களை தாமதப்படுத்துவது நன்மை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அருகில் வைத்திருக்க வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply