வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு உல்ஹிடியாவ பகுதியில் நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கொலை சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் வென்னப்புவை பொலிஸ் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாரவில, மூதூகட்டுவ பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் உல்ஹிடியாவ பகுதியில் உள்ள வீட்டில் காவலாளியாக பணி புரிபவர் ஆவர்.
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் இத்தாலியில் வசித்து வரும் நிலையில் கொல்லப்பட்டவர் அந்த வீட்டின் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
வெளிநாட்டில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்தபோது, காவலாளி கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீட்டின் அறையொன்றில் மரணமடைந்திருப்பதைக் கண்டதாகவும், வீட்டின் கராஜில் நிறுத்தப்பட்டிருந்த வேன் வாகனமும் காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அளிக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
