ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பர பகுதியில் நபர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டில் நபரொருவருடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த வேளையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் தீவிரமடையவே சந்தேகநபர் அவரது தலையில் தடி ஒன்றால் தாக்கியதில் இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்த சந்தேகநபர், உயிரிழந்தவரின் உறவினர் ஒருவரின் மகன் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
