கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- கோப்பாயில் பயங்கரம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.

மடத்தடி, இருபாலை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் மடத்தடி பகுதியில் சந்தேகநபர்கள் மறைந்திருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதன்போது படுகாயமடைந்த நபரை யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply