வவுனியா மாநகர சபை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வசம்!

வவுனியா மாநகர சபையின் மேஜராக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு செய்யும் நிகழ்வு இன்றைய தினம் (16) மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவுசெய்யப்படுவதற்காக பகிரங்க வாக்களிப்பு நடாத்தப்பட்டது.

இதன்போது சங்கு கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட சு.காண்டீபனுக்கு ஆதரவாக 11வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட சிவசோதி சிவசங்கருக்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

இதன்படி சங்கு கூட்டணியைச் சேர்ந்த சு.காண்டீபன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகர சபையின் புதிய முதல்வராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி முதல்வர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது, ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், சுயேட்சைகுழுவை சேர்ந்த சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் அவர்களுக்கு 10வாக்குகளும் ஆதரவாக அளிக்கப்பட்டது.

இதில் ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply