ஜனாதிபதி பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவரை விடுதலை செய்த சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சின் நிர்வாக தர அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த காலத்தில் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள 28 சிறைச்சாலைகளுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைதியின் விடுதலை தொடர்பாக அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் சிறைச்சாலை ஆணையர் நாயகம் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
