கொழும்பு மாநகர சபை அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்!

கொழும்பு மாநகர சபையின் புதிய மேஜராக தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையின் புதிய மேஜரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு, உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட விராய் கெலி பல்தஸார் 61 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரியா சாருக் 54 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

இதில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று கொழும்பு மாநகர சபையின் புதிய மேஜராக தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு அமைய பிரதி மேயராக ஹேமந்த குமாதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply