கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட மேலும் 3 சபைகளின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்!

இரத்தினபுரி மாநகர சபையின் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

இரத்தினபுரி மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் கே.ஏ.டி.ஆர்.ஐ. கட்டுகம்பல 14 வாக்குகளைப் பெற்று புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தம்புள்ளை பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் கட்சியின் டபிள்யூ.எம். திலகரத்ன இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவர் 15 வாக்குகளைப் பெற்றார்.

எதிர்க்கட்சியில் இருந்து பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் 6 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் 5 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

கல்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் முகமது ரிக்காஸ் இன்று நியமிக்கப்பட்டார்.

இன்று காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் 16 வாக்குகளைப் பெற்றதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட மொஹமட் ஆசிக் 15 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply