தம்புள்ளை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் தீர்மானத்திற்கு அமைய செயற்படாத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
01. ஹேரத் முதியன்சலே சுசில் ஹேரத்
02. அதிகாரீனாயக முதியன்சேலாகே பெனபொடே கெதர அனில் இந்ரஜித் தசநாயக்க
03. கரதகொல்லே வலவ்வே தனஞ்சய சம்பத் கரதகொல்ல
04. அலுத் கெதர பிரியரஞ்சன குமார ரத்நாயக்க
05. ஹேரத் முதியன்சேலாகே குசுமா குமாரி
06. கிரிஷாந்தி தில்ருக்ஷி பிரேமரத்ன
ஆகிய நபர்களின் கட்சி உறுப்பினர் பதவி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
