யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் (15) விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
குறித்த அம்மன் ஆலயத்துக்கு செல்வதற்கு விசேட தினங்களில் மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் (15) முதல் குறித்த ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபாடு செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இனிவரும் நாட்களில் மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்ததுடன், நேற்று ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பூஜை வழிபாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


